ஈரான் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 7தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியா திரும்பியுள்ளனர். குறித்த மீனவர்கள் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் ஈரான் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிந்ததாக கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதுதொடர்பில் ஈரான் அரசாஙகத்துடன் இந்திய மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அடுத்து குறித்த மீனவர்களை விடுதலை செய்வதாக ஈரான் தெரிவித்துள்ளது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்று இந்தியா திரும்பியுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து தங்களது விடுதலைக்கு உதவியமைக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
Spread the love
Add Comment