இந்தியா

முடிவு தெரியாமல் நகரமாட்டோம் -விவசாயிகள் – மொட்டை அடித்து போராட்டம் 26வது நாளாக தொடர்கின்றது

முடிவு தெரியாமல் நகரமாட்டோம் என தெரிவித்து  மொட்டை அடித்து விவசாயிகள் போராட்டம் டெல்லியில் இன்று  26வது நாளாக தொடர்கின்றது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாய கடன்களை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த 14ம் திகதியிலிருந்து டெல்லியில் போராட்டம் நடந்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான போராட்டத்தை கையிலெடுத்து தங்களது பாதிப்பையும் கோரிக்கையையும் மத்திய அரசுக்கு தெரிவித்து 26வது நாளாக இன்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இன்று  மொட்டை அடித்து வெட்ட வெயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்

உண்ணாவிரதம் மேற்கொண்டதில் பெருமாள் என்ற விவசாயி உள்ளிட்ட இருவருக்கு கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குட்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply