உலகம்

மியான்மாரில் இடம்பெற்ற படகுவிபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்


மியான்மாரில் திருமண வீடொன்றுக்கு சென்ற படகு ஒன்று சரக்கு கப்பல் ஒன்றுடன் மோதியதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். படகு திடீரென கட்டுப்பாட்டை இழந்து நதியில் சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல் மீது  மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மியன்மாரின இராவட்டி பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் அதிகளவானவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  எட்டு பேரை இன்னமும் காணவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த படகில் 60 முதல் 80 வரையிலான பயணிகள் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர் எனவும் ஒரே கிராமத்தைச் சேர்ந்த உறவினர்களே அதிகளவில் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த பகுதியில் கடந்தாண்டு ஒக்டோபர் மாதம் நடந்த படகு விபத்தில் 73 பேர் உயிரிழந்தனர்; என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply