புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கோரியுள்ளார். தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்யப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்படும் என ஏற்கனவே வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது அவசியமானது எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர் அர்த்தமுள்ள வகையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment