இந்தியா

தமிழக ஆளுனர் நியமனம் குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்துக்கு நிரந்தர ஆளுநர் ஒருவரை நியமிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இந்திய மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பத்திரிகையாளர் அன்பழகனால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு வழக்கு நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி  உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் வழக்கு எதிர்வரும் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநராகவிருந்த கே.ரோசய்யாவின் பதவிக்காலம் நிறைவு பெற்றதையடுத்து, தமிழக பொறுப்பு ஆளுநராக மராட்டிய மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் நியமிக்கப்பட்ட போதும்  தமிழகத்துக்கென  நிரந்தர ஆளுநர்  ஒருவர் நியமிக்கப்படுவது அவசியமானதென் அன்பழகன்  தனது மனுவில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply