இந்தியா

தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் தமிழக தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தது மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடத்தியது தொடர்பாக டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா ஆகியோர் இன்று ஆலோசனை நடத்தியுள்ளனர்.

ஆர்.கே.நகரில் பணம் வழங்கியமை  தொடர்பாக வருமான வரித்துறையினர் அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் உள்ளிட்டோரின் வீடுகள் உட்பட 50 இடங்களில் சோதனை நடத்தியதில் ஆர்கே.நகரில் 89 கோடி ரூபாய் வரை பண வரிவர்த்தனை செய்ததற்கான ஆதாங்கள் கைப்பற்றியிருந்தனர்.

அத்துடன்  அமைச்சர்களுக்கு பணம் கொடுத்ததற்கான ஆவணமும் அதில் அமைச்சர்கள் பணத்தை பெற்றுக்கொண்டதற்கான கையெழுத்து உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான அறிக்கை தேர்தல் ஆணையத்திடம் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.