காவல்துறை உத்தரவினை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த முச்சக்கர வண்டியில் பயணித்த நான்கு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இன்றைய தினம் அதிகாலை பல்லேவல காவல்துறையினர் குறித்த இளைஞர்களை கைது செய்துள்ளனர். வாகன சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத காரணத்தினால் முச்சக்கர வண்டியை நிறுத்தவில்லை என இளைஞர்கள் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும், முச்சக்கர வண்டிக்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மரண வீடொன்றில் சூதாடச் சென்று திரும்பிய இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
Spread the love
Add Comment