பசர் அல் அசாட் பதவியில் நீடிக்கும் வரையில் சிரியாவில் சமாதானத்திற்கு இடம் கிடையாது என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான அமெரிக்கப் பிரதிநிதி நிக்கி ஹலே (Nikki Haley ) தெரிவித்துள்ளார். சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதனை அமெரிக்க நிர்வாகம் விரும்புகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீ.என்.என். செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ள அவர் ஐ.எஸ். தீவிரவாதிகளை இல்லாதொழிப்பதனையே அமெரிக்கா முதன்மை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் சிரியாவில் ஆட்சி மாற்றம் விரைவில் ஏற்படும் என்றே எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
Add Comment