இந்தியா

இந்தியாவில் எதிர் காலங்களில் மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தை நிறுத்தி வாக்குச் சீட்டு முறையை கொண்டு வருமாறு கோரிக்கை


இந்தியாவில் எதிர்காலங்களில் நடைபெறும்   தேர்தலில் மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தைப் பயன்படுத்துவதை நிறுத்தி மீண்டும் வாக்குச் சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 16 கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை விடுத்துள்ளன. குறித்த கட்சிகள்  இந்திய தேர்தல் ஆணையரை சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன.

இந்தியா அதிக மக்கள் தொகைகொண்ட நாடு என்பதனால்  மின்னணு வாக்குபதிவு இயந்திரம் மூலம் வாக்கப்பதிவு நடைபெற்றால், தேர்தலை எளிதில் நடத்த முடியும் எனும் நோக்குடன்  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்  அறிமுகப்படுத்தப்பட்டது.

எனினும்  தற்போது மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம்  மூலம் வாக்குபதிவில் முறைகேடுகள் நடைபெறுகின்றன என  பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply