
அமெரிக்காவின்; கலிப்போர்னியா மாகாணத்தில் ஆரம்ப பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
பாடசாலையில் நுழைந்த ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் ஆசிரியர் ஒருவரும் மாணவர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதுடன் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட நபரும் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கொல்லப்பட்ட ஆசிரியர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டவரின் மனைவி எனவும் சில மாதங்களுக்கு முன்னர்தான் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 வயது மாணவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 9 வயது மாணவர் காயமடைந்தநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Add Comment