புத்தாண்டு காலத்தில் மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 13ம் மற்றும் 14ம் திகதிகளில் மதுபான கடைகளை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் உத்தரவினை மீறி மதுபான கடைகளை திறப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் கடைகளை திறந்து வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நோக்கில் கலால் திணைக்கள அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
Add Comment