உலகம்

ஐ.நா. சபையின் இளம் அமைதித் தூதராக மலாலா யூசப்சாய் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.


ஐ.நா. சபையின் இளம் அமைதித் தூதராக மலாலா யூசப்சாய் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.  ஐ.நா. பொதுச் செயலாளர் அன்ரனியோ குட்டாரஸ்  அவருக்கு பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளார்.  பாகிஸ்தானைச் சேர்ந்த பாடசாலை  மாணவியான மலாலா யூசப்சாய்  கடந்த 2012-ஆம் ஆண்டு பெண் குழந்தைகளுக்கான கல்வி உரிமைக்காக குரல் கொடுத்த காரணத்தால் தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டிருந்தார்.  தலையில் பலத்த காயத்துடன் லண்டன் கொண்டு வரப்பட்ட மலாலா அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டநிலையில் லண்டனிலேயே வசித்து வருகின்றார்

கடந்த 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்தியார்த்தி மற்றும் 19 வயதான மலாலா ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply