இலங்கை

சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்த முயற்சிக்கப்படுகின்றது – மஹிந்த ராஜபக்ஸ


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்த முயற்சிக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் போசகர்களில் ஒருவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கட்சியின் பிரபலமான சிறந்த தலைவர்கள் தொகுதி அமைப்பாளர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டு, மக்கள் ஆதரவற்றவர்கள் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் தற்போதைய தலைமைகள் கட்சியை பலவீனப்படுத்தவே முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைள் குறித்து மக்கள் போதிய தெளிவுடன் இருக்க வேண்டுமெனவும் கட்சி தொடர்பில் எவ்வித கரிசனையும் அற்றவர்கள் உயர் பதவிகளை வகிப்பதனால் கட்சி இன்று பாரதூரமான நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply