விளையாட்டு

ஜெரோம் டெய்லர் மீளவும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் தீர்மானம்


மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெரோம் டெய்லர் மீளவும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் தீர்மானித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக் கொள்வதாக டெய்லர் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னதாக அறிவித்திருந்தார்.

எனினும் தற்போது தமது தீர்மானத்தை மாற்றிக் கொண்டுள்ளதாகவும் மீளவும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உத்தேசித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேற்கிந்திய கிரிக்கட் சபைக்கு அவர் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

32 வயதான டெய்லர் இதுவரையில் 46 டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் 21ம் திகதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆரம்பாக உள்ள டெஸ்ட் கிரிக்கட் போட்டித் தொடரில் டெய்லர் பங்கேற்கக் கூடிய சாத்தியம் உண்டு எனத் தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply