உலகம்

இரசாயன தாக்குதல் குறித்த குற்றச்சாட்டு வெறும் கட்டுக்கதையே – சிரிய ஜனாதிபதி


இரசாயன தாக்குதல் குறித்த குற்றச்சாட்டு வெறும் கட்டுக்கதையே என சிரிய ஜனாதிபதி பசர் அல் அசாட் தெரிவித்துள்ளார். நூறு வீதம் ஜோடனை செய்யப்பட்டு இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு எவ்வித ஆதாரங்களும் கிடையாது என  சுட்டிக்காட்டியுள்ள அவர் இந்த சம்பவம் குறித்த காணொளி போலியானது எனவும் தற்போது இவ்வாறான போலிக் காணொளிகள் அநேகம் உலவுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா , பயங்கரவாதிகளுடன் இணைந்து செயற்படுவதாகவும், பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க அமெரிக்க மெய்யான முனைப்பினை காட்டவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply