தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாபுலவில் அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு இராணுவத் தலைமையகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் இன்றைய தினம் கறுப்பு சித்திரைப் புத்தாண்டு தினமாக அனுஷ்டித்துள்ளனர்.
கறுப்பு உடைகள் அணிந்து, இராணுவ தலைமையகத்தை நோக்கி தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் எனப் பலதரப்பட்டவர்களும் கறுப்புடை அணிந்து கறுப்பு சித்திரைப் புத்தாண்டை அனுஷ்டித்துள்ளனர்.
Add Comment