இலங்கை

தனியார் சுகாதார சேவைக்கானக்கான சட்டமூலத்தில் திருத்தம் செய்வதற்கு தீர்மானம்


தனியார் சுகாதார சேவைக்கான ஒழுங்குமுறை சபை ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பான சட்டமூலத்தில் திருத்தம் செய்வதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தீர்மானித்துள்ளாா் எனவும் இதற்காக சுகாதாரப் பணிப்பாளரின் தலைமையில் மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும்  சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக தனியார் வைத்தியசாலையின் பணிப்பாளர் ஒருவர் மற்றும் சுகாதார அமைச்சின் சட்டப் பணிப்பாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  மேலும் இது தொடர்பான அறிக்கை ஒரு மாத காலத்திற்குள் தயார் செய்யப்பட்டு  சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்பட உள்ளதாகவும்   சுகாதார  அமைச்சு தெரிவித்துள்ளது

பிரித்தானியாவின்  தனியார் சுகாதார சேவைக்கான ஒழுங்குமுறை சபை அறிக்கையை கருத்திற் கொண்டு இந்த சட்டமூலத்தை சீரமைக்குமாறு சுகாதார அமைச்சர் அந்தக் குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply