உலகம்

அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையில் யுத்தம் ஏற்படக்கூடிய அபாயம் – சீனா


அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையில் யுத்தம் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியா தொடர்பான பதற்றம் அதிகரித்துள்ளதாகவும் எந்த நேரத்திலும் யுத்தம் ஏற்படக் கூடும் எனவும்  சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி ( Wang Yi) தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையில் யுத்தம் ஏற்பட்டால் அதில் வெற்றியாளர் எவரும் இருக்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ள அவர் யுத்தம் ஏற்பட்டால் அது பல்வேறு தரப்புக்களை பாதிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.