தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டொக்டர் கீதாலட்சுமி ஆகியோரை எதிர்வரும் 17ம் திகதி நேரில் முன்னிலையாகுமாறு மீண்டும் அவர்களுக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது. விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள் வீடு, தொழில் நிறுவனங்கள், சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான ஆர்.சரத்குமார் வீடு, எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டொக்டர் கீதாலட்சுமி வீடு ஆகியவற்றில் வருமானவரித்துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் கடந்த 9ம் திகதிவிஜயபாஸ்கர், சரத்குமார், கீதாலட்சுமி, சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் வருமான வரி புலனாய்வு பிரிவில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டமைக்கேற்ப வருமானவரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் நேரில் முன்னிலையாகி விளக்கம் அளித்தனர்.
இந்த நிலையில் அமைச்சர்; விஜயபாஸ்கர், மற்றும் டொக்டர் கீதாலட்சுமி ஆகியோரை எதிர்வரும் 17ம் திகதி நேரில் முன்னிலையாகுமாறு வருமான வரித்துறை மீண்டும் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
வருமானவரி சோதனையில் சிக்கிய ஆவணங்களின் உண்மைத்தன்மையை நிரூபிக்கும் வகையில் மேலும் விசாரணை மேற்கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Add Comment