இரண்டு கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் ஈரானிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து இந்த ஈரானியர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தப் போதைப் பொருளின் பெறுமதி சுமார் இருபது மில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபரிடம் இலங்கை சுங்கப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Add Comment