விளையாட்டு

வெனன் பிலான்டர் உபாதையினால் பாதிப்பு


தென் ஆபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் வெனன் பிலான்டர்  (Vernon Philander) உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார். பிலான்டர் தற்போது இங்கிலாந்து கழக மட்டப் போட்டிகளில் பங்கேற்று வருகின்றார். கென்ட் அணியின் சார்பில் போட்டிகளில் பங்கேற்று வரும் பிலான்டர் சசெக்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது  இவ்வாறு உபாதைக்கு உள்ளாகியுள்ளார்.

இந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டித் தொடரின் போது பிலான்டர் விளையாட முடியாத நிலைமை ஏற்படலாம் என அச்சம் வெளியிட்டுள்ளது. இந்த நிலைமையானது தென் ஆபிரிக்க கிரிக்கட் நிர்வாகத்திற்கு தலையிடியை ஏற்படுத்தியுள்ளது. உடற்பரிசோதனையின் பரிசோதனையின் பின்னர் பிலான்டரின் உபாதையின் பாதிப்பு குறித்து சரியான தகவல்களை வெளியிட முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply