ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படத் தீர்மானித்துள்ளனர். பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதற்கு இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமரும் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவுடன் இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்படத் தீர்மானித்துள்ளனர். ஐ.தே.க அமைச்சர்களுக்கு எதிராக குரல் கொடுத்து கட்சியின் நற்பெயரை பாதுகாக்கும் நோக்கில் இவர்கள் சுயாதீனமாக இயங்க உள்ளனர்.
Add Comment