இலங்கை

அம்பலன்தோட்டையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்


அம்பலன்தோட்டை – மாமடல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் ஒருவர்   கொல்லப்பட்டுள்ளதுடன்  3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.  எலேகொட பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு பின்னர் கூரிய ஆயுதங்களால் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply