காஷ்மீரின் தற்போதைய நிலைமை குறித்து இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் ஆகியோர் நேற்றையதினம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசுபவர்களுக்கு எதிராக ராணுவ வாகனத்தில் வாலிபர் ஒருவரை கட்டி மனித கேடயமாக ராணுவத்தினர் அழைத்துச் சென்றதாக சமூகவலைத்தளங்களில் பரவியுள்ள நிலையில் காஷ்மீரில் உள்ள தற்போதைய நிலைமை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தற்போதைய நிலவரம் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் ராணுவ தளபதி விரிவாக எடுத்துக்கூறியதுடன் காஷ்மீரில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விளக்கம் அளித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Add Comment