விளையாட்டு

பியெல் பியானி ஓபன் போட்டித் தொடரில் மார்கெடா வெற்றி


சுவிட்சர்லாந்தின் பியெல் பியானி ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் செக் குடியரசு வீராங்கனை மார்கெற்றா வொன்ரோசோவா  (Marketa Vondrousova )  வெற்றியீட்டியுள்ளார். 17 வயதான மார்கெற்றாவின் முதலாவது டபிள்யூ.ரீ.ஏ டென்னிஸ் சம்பியன் பட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. எஸ்டோவினயாவின்  அனெற் கொன்ராவெயிற்றை  (Anett Kontaveit   )  6-4 7-6  என்ற செற் கணக்கில மார்கெற்றா   வெற்றியீட்டியுள்ளார்.

மார்கெற்றா   வொன்ரோசோவா   உலக டென்னிஸ் தர வரிசையில் 233ம் இடத்தை வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய இந்த வெற்றியானது உலக டென்னிஸ் தர வரிசையில் முதல் 100 இடங்களுக்குள் ஒர் இடத்தைப் பிடிக்க வழியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply