மீதொட்டுமுல்ல குப்பை மேடு சரிந்து வீழ்ந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்கப்பட உள்ளது. அனர்த்தத்தில் உயிரிழந்த மற்றும் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபா நட்டஈடு வழங்கப்பட உள்ளது.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சொத்து சேதங்களுக்கு 25 லட்சம் ரூபா வரையில் நட்ட ஈடு வழங்கப்பட உள்ளது. மீதொட்டுமுல்ல அனர்த்தத்தின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடி நடத்திய பேச்சுவார்த்தையின் போது நட்டஈடு வழங்குவது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment