பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் நாடு திரும்ப உள்ளார். வியட்நாமுக்கான பயணத்தை முன்கூட்டியே பூர்த்தியாக்கிக் கொண்டு பிரதமர் இவ்வாறு நாடு திரும்ப உள்ளார். மீதொட்டுமுல்ல பிரதேசத்தில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக இவ்வாறு தனது பயணத்தை முன்கூட்டியே முடித்துக் கொண்டு பிரதமர் நாடு திரும்புகின்றார்.
ஜப்பானுக்கு சென்றிருந்த பிரதமர் அந்த பயணத்தை முடித்துக் கொண்டு, கடந்த 16ம் திகதி வியட்நாமுக்கு சென்றிருந்தார். நாளை நள்ளிரவு பிரதமர் நாடு திரும்புவார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும் எனினும் மீதொட்டுமுல்ல அனர்த்தம் காரணமாக பிரதமர் முன்கூட்டியே நாடு திரும்ப உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment