முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவுடன் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமக்கும் தமது சகோதரரான கோதபாய ராபஜக்ஸவிற்கும் இடையில் முரண்பாடு நிலவி வருவதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என குறிப்பிட்டுள்ள அவர் கடந்த காலத்திலோ நிகழ் காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ முரண்பாடுகள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் கிடையாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். கோதபாய ராஜபக்ஸவுடனான உறவு அன்பினாலானது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சீனா, பாகிஸ்தான், அமெரிக்க மற்றும் பிரி;த்தானியா போன்ற நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்க ஒத்துழைப்பு வழங்கியதாகத் தெரிவித்துள்ளார். நாட்டையும் நாட்டு மக்களையும் தொடர்ந்தும் பாதுகாக்க தாம் முனைப்பு காட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment