உலகம்

சிரியாவின் பள்ளிவாசல் மீது அமெரிக்கா வான் தாக்குதல்


சிரியாவின் பள்ளிவாசல் ஒன்று மீது அமெரிக்கா வான் தாக்குதல் நடத்தியுள்ளது. வட சிரியாவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைதியாக தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் தகவல்களை  வெளியிட்டுள்ளது.

இந்தத்  தாக்குதல் காரணமாக குறைந்தபட்சம் 38 பேர் கொல்லப்பட்டதுடன், பெரும் எண்ணிக்கையிலானவர்கள் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் கடந்த மார்ச் மாதம் 16ம் திகதி இடம்பெற்றுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply