அரசங்கம் கவிழ்க்கப்படும் என்ற பிரச்சாரம் மிகப் பெரிய பொய்யாகும் என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி ஒன்றுக்கு வாக்களித்த கிராமத்திற்கு எதுவும் கிடைக்காத நிலையை மக்கள் விரும்புவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2020ம் ஆண்டிலேயே பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்கள் நடத்தப்பட உள்ளதாகவும் அதுவரையில் இந்த அரசாங்கத்தை எவரினாலும் அசைக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சி வெற்றியீட்டக்கூடிய சாத்தியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்
Add Comment