முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் வட்டுவாகல்பகுதிகளில் கடற்படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி இன்றையதினம் பாதிக்கப்பட்ட மக்கள் கவனயீர்ப்புப்போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான 397 ஏக்கர்காணி மற்றும் அரச காணிகள் உட்பட 617 ஏக்கர் வரையான காணியை கடந்த 2009ம் ஆண்டு முதல் கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ளதுடன் குறித்த கட்டுப்பாட்டு பகுதிக்குள் பொதுமக்களுக்கு சொந்தமான கால்நடைகளும் உள்ளன.
குறித்த காணிகளை விடுவிக்குமாறும் கால்நடைகளை மீட்டுத்தருமாறும் அதன் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.
Spread the love
Add Comment