இலங்கை

கிழக்கு மாகாண புதிய தாதியர்களுக்கான நியமனங்கள் கிழக்கு முதலமைச்சரால் வழங்கி வைப்பு

கிழக்கு மாகாண புதிய  தாதியர்களுக்கான  நியமனங்கள் இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் வழங்கிவைக்கப்பட்டன.  கிழக்கு மாகாண   சபைக்கட்டடத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற நியமனம் வழங்கும்  நிகழ்வில் 34  தாதியருக்கான நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல் முஹம்மட் நஸீர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கருணாகரன், உதவிச்செயலாளர் உசைனுடீன், மாவட்ட பணிப்பாளர் முருகாணந்தன் உள்ளிட்ட பலர்  இந்த நிகழ்வில் கலந்து கொண்டதுடன் அவர்களும் நியமனங்ளை வழங்கிவைத்தனர்.

அம்பாறை பிராந்தியத்திற்கு 18பேரும்,  கல்முனைபிராந்தியத்திற்கு ஒருவரும், மட்டக்களப்பு பிராந்தியத்திற்கு 05பேரும், திருகோணமலை பிராந்தியத்திற்கு 10பேருக்கான நியமனங்கள்  வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

Add Comment

Click here to post a comment

Leave a Reply