இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ், பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தி மரண தண்டனை விதித்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் துணை தூதர் சையது ஹைதர் ஷாவுக்கு இந்தியா அழைப்பாணை விடுத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் துணை தூதர் சையது ஹைதர் ஷாவை நேற்றையதினம் நேரில் வரவழைத்த இந்திய வெளியுறவு அமைச்சு அவரிடம், குல்பூஷண் ஜாதவ் நிரபராதி, அவர் மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், குல்பூஷண் ஜாதவை தூதரகரீதியாக சந்தித்து பேசுவதற்கு அனுமதிக்குமாறு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Add Comment