உலகம்

தலாய் லாமாவின் இந்திய பயணத்தை தொடர்ந்து சர்ச்சைக்குரிய ஆறு மாவட்டங்களுக்கு சீனா பெயர் மாற்றம்


தலாய் லாமா இந்தியாவில் பயணம்  மேற்கொண்டதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இமாலய எல்லை பகுதிகளில் இந்தியாவுடன் சர்ச்சைக்குரிய ஆறு மாவட்டங்களுக்கு சீனா பெயர் மாற்றம் செய்துள்ளது.  ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்திற்கு, 81 வயது திபத்திய ஆன்மீக தலைவரான தலாய் லாமா பயணம் செய்திருந்தார்.

தலாய் லாமாவின் பயணம் ; இருதரப்பு உறவுகளிலும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாகவும், சீனாவின் விருப்பதை இந்தியா நிராகரிப்பதாக போல் உள்ளதாகவும்  சீனா தெரிவித்துள்ளது.   இந்த அறிவிப்புக்கு இந்தியா இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில் கிழக்கு திபத்தில் சீனாவிற்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் இந்திய கட்டுப்பாட்டிற்குள்ள சில பகுதிகளில் உள்ள ஆறு இடங்களின் பெயரை சீனா மாற்றியுள்ளது என சீன அரசு ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.