கொலம்பியாவில் இடம்பெற்ற மண்சரிவில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேற்கு கொலம்பியாவின் மணிஷால்ஸ் ( Manizales )நகரில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. மண்சரிவில் சிறுவர் சிறுமியரும் உயிரிழந்துள்ளதுடன் 20 பேரைக் காணவில்லை என வும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஒரு மாத காலமாக கொலம்பியாவில் கடுமையான மழை பெய்து வருகின்றதனால் மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக வீதிப் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 57 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Add Comment