இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவு ஏற்படக்கூடிய சாத்தியம்


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் மே தினக் கூட்டத்தின் போது கட்சியின் பிளவு தெளிவாக அம்பலமாகும் என தெரிவிக்கப்படுகிறது. கண்டி கட்டம்பே மைதானத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் வேறும் கூட்டங்களில் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்கக் கூடாது எனவும் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியே காலி முகத் திடலில் மே தினக் கூட்டம் நடத்துவதாகவும் இந்த மே தினக் கூட்டத்தில் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கண்டி மே தினக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்பதில் தமக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது என தெரிவித்துள்ள அவர் அவ்வாறு கண்டி மே தினக் கூட்டத்தில் பங்கேற்காது, காலி முகத்திடல் கூட்டத்தில் பங்கேற்போர் தொடர்பில் கட்சி நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையானது கட்சி பிளவடைவதனை தவிர்க்க முடியாததாக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply