இந்தியா

சிறைச்சாலையில் 2 கைத்தொலைபேசிகள் சிம் கார்டுகள் வைத்திருந்தமை தொடர்பில் முருகன் நீதிமன்றில் முன்னிலை


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன்  சிறைச்சாலையில்  2 கைத்தொலைபேசிகள்  சிம் கார்டுகள்  வைத்திருந்த வழக்கு தொடர்பில் வேலூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். அவர் காவி உடையில் சாமியார் போல வந்தார் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் ஆண்கள் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.  கடந்த மாதம் 25ம் திகதி முருகன் அடைக்கப்பட்டுள்ள அறையில் சிறைச்சாலை  காவலர்கள் திடீரென சோதனை நடத்தியவேளை  2 கைத்தொலைபேசிகள்  சிம் கார்டுகளை கைப்பற்றியிருந்தார்கள். இது தொடர்பான வழக்கிலேயே முருகன் நீதிமன்றில் முன்னிலையானார்.   இதுதொடர்பான வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 4ம் திகதிக்கு ஒத்திவைக்க்பபட்டுள்ளது.

நீதிமன்றலிருந்து வெளியே வந்த முருகனிடம் நிருபர்கள் பேட்டி எடுக்க முயன்றபோது, அவர் நிருபர்களை பார்த்து கைகூப்பி கும்பிடுவது போல் பாவனை காட்டியவாறு சென்றதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில்  அடைக்கப்பட்ட பிறகு நேற்று தான் முருகன் நீதிமன்றில் முன்னிலையாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply