விளையாட்டு

இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரர் மாரடைப்பில் மரணம்


இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரர் ஊகோ ஏகிஓகோ  (Ugo Ehiogu ) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். ஊகோ  அஸ்தன் விலா கழகத்தின் முன்னாள் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. 44 வயதான ஊகோ  பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.

ஊகோ இ ரொட்னம்  கழகத்தின் 23 வயதுக்கு கீழ் அணியின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றியிருந்தார். ஊகோவின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஓர் இழப்பாகும் என  ரொட்னம்   கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. 1991ம் ஆண்டு முதல் 2000மாம் ஆண்டு வரையில் ரொட்னம்     கழகம் சார்பில் ஊகோ 200 போட்டிகளில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஊகோ மறைவிற்கு பல்வேறு கால்பந்தாட்ட பிரபலங்களும் சக வீரர்களும் ஆழ்ந்த இரங்கல்களை சமூக ஊடக வலையமைப்புக்களின் ஊடாக வெளியிட்டு வருகின்றனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply