மீதொட்டமுல்ல சம்பவம் குறித்த பாராளுமன்ற விவாதம் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறாது என தெரிவிக்கப்படுகிறது.
மீதொட்டமுல்ல பிரதேசத்தில் ஏற்பட்ட பாரிய அனர்த்தம் தொடர்பில் எதிர்வரும் 24ம் திகதி பாராளுமன்ற விவாதம் நடத்தப்படவிருந்தது. எனினும், உத்தேசிக்கப்பட்டவாறு விவாதம் நடத்தும் சாத்தியமில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய தமக்கு அறிவித்தார் என, கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். பிரதமரின் இந்திய பயணம் காரணமாக இவ்வாறு விவாதம் காலம் தாழ்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் எதிர்வரும் மே மாதம் 3ம் திகதி இந்த விவாதம் நடத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love
Add Comment