இலங்கை பிரதான செய்திகள்

காவல்துறை மா அதிபர் ஊழியரைத் தாக்கியதாகக் குற்றச்சாட்டு


காவல்துறை மா அதிபர் ஊழியர் ஒருவரைத் தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. காவல்துறை தலைமையகத்தில் வைத்து கடந்த 12ம் திகதி இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பிலான காணொளியொன்று தற்போது வெளியாகியுள்ளது. காவல்துறை மா அதிபர் சில அதிகாரிகளை கடுமையாக திட்டும் காட்சிகளும் இதில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெயர் குறிப்பிட விரும்பாத உயர் காவல்துறை அதிகாரியொருவர் இது பற்றிய தகவல்களை வழங்கியுள்ளார்.

இதேவேளை, காவல்துறை மா அதிபர் தனக்கு  எதிரானவர்கள் போலியான வகையில் இவ்வாறு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் காவல்துறை திணைக்களத்தில் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மேற்கொண்டு வரும் மாற்றங்களை பொறுத்துக் கொள்ள முடியாத சில இவ்வாறு போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers