உலகம்

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் முதற் சுற்றில் எம்மானுவேல் மக்ரோன், மரின் லி பென் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்:-

பிரான்ஸ் ஜனாதிபதி  தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவுகள் வெளியாகி உள்ளன. இந்த முடிவுகளின்படி   எம்மானுவேல் மக்ரோன், மரின் லி பென் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளனர்.

மிதமான வலதுசாரியான  ஈமானுவல் மேக்ரோன் 23.7% வாக்குகளையும்,   அதிதீவிர வலதுசாரி தலைவர் மரைன் லு பென் 21.7%  வாக்குகளையும் பெற்று முதற் சுற்றில் தேர்வாகி உள்ளனர்.

இவர்கள் இருவரும் எதிர்வரும் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ள அடுத்த கட்ட தேர்தலை சந்திக்க உள்ளனர்.

 

பிரான்ஸ் ஜனாதிபதி  தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகியுள்ளது


பிரான்ஸ் ஜனாதிபதி  தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகி எதிர்வரும் மே 7ஆம் திகதிவரை நடைபெற உள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் பிரான்சில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடைபெறுவதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முறை தேர்தலில் எம்மானுவேல் மக்ரோன், மரின் லி பென், பிராங்கோயிஸ் ஃபிலான், ஜீன் மெலன் சோன், பெனுவா ஹமூன் உள்ளிட்ட 11 பேர் ஜனாதிபதி  பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

எனினும் இந்தமுறை பாரம்பரிய அரசியல் கட்சிகளை சாராத வேட்பாளர்களே முதல் இரண்டு இடங்களை பிடிப்பார்கள் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. ; தேர்தல் 2  கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று  ஆரம்பமாகின்றது. மே 7-ல் இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply