இந்தியா

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் மேற்கொண்ட தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸார் 26 பேர் உயிரிழந்துள்ளனர்


இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீஸார் மீது  மாவோயிஸ்டுகள் மேற்கொண்ட தாக்குதலில்   26 பேர் உயிரிழந்துள்ளனர் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்தின்  சுக்மா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை சார்பில் வீதி ஒன்று அமைக்கப்பட்டு இன்று திறக்கப்பட இருந்தது.  இந்நிகழ்வில் மத்திய ரிசர்வ் போலீஸார் கலந்து கொண்டுள்ள நிலையில் மாவோயிஸ்டு இயக்கத்தினர் ரகசியமாக அவ்விடத்தை முற்றுகையிட்டு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீஸார் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

மாவோயிஸ்டுகளின் இத்தாக்குதலில் 26 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply