இலங்கை

மே தினக் கூட்டத்தில் பங்கேற்காத கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை


மே தினக் கூட்டத்தில் பங்கேற்காத கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். கண்டி கட்டம்பே மைதானத்தில் மட்டுமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் நடத்த உள்ளதாகவும் கட்சியின் மே தினக் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானம் எடுத்துள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்மானத்திற்கு எதிராக செயற்படும் கட்சியின் உறுப்பினர்கள் தராதரம் பாராது தண்டிக்கப்படுவர் என குறிப்பிட்டுள்ள அவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அனைவரும் கண்டி மே தினக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டியது கட்டாயமானது எனவும் தெரிவித்துள்ளார்

Add Comment

Click here to post a comment

Leave a Reply