இந்தியா பிரதான செய்திகள்

உலகிலேயே இராணுவத்துக்காக அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 5-வது இடத்தைப் பிடித்துள்ளது:-

உலகிலேயே இராணுவத்துக்காக அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 5-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஸ்டொக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-ல் இந்தியாவின் இராணுவ செலவினம் 8.5 சதவீத மாக அதிகரிக்கப்பட்டதுடன் ராணுவத்தை மேம்படுத்த 55.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள செலவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் இராணுவத்துக் காக அதிகம் செலவிடும் நாடு களின் பட்டியலில் இந்தியா 5-வது இடத்தைப் பிடித்துள்ளது.

முதல் இடத்தில் உள்ள அமெரிக்கா 2015 மற்றும் 2016-ம் காலக்கட்டத்தில் 1.7 சதவீதம் வரை ராணுவ செலவினத்தை அதிகரித்து 611 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது.

சீனா, ஜப்பான், தென்கொரியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் முதல் 15 இடங்களில் இடம்பிடித்துள்ளன. இதில். 2-வது இடத்தில் உள்ள சீனாவின் ராணுவ செலவினம் 215 பில்லியன் டொலர்கள் எனவும் 3வது இடத்தை வகித்துள்ள ரஸ்யாவின் செலவினம் 69.2 பில்லியன் டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers