இலங்கை

அதிகாரங்கள் பகிரப்பட்டால் மாத்திரமே நாட்டில் சகல இன மக்களும் சிநேகபூர்வமாக வாழலாம் – ராஜித


தந்தை செல்வா குறிப்பிட்டதைப் போன்று அதிகாரங்கள் பகிரப்பட்டால் மாத்திரமே நாட்டில் சகல இன மக்களும் சிநேகபூர்வமாக வாழலாம் என சுகாதார அமைச்சர்  ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றையதினம்  நடைபெற்ற தந்தை செல்வா நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தந்தை செல்வா முன்வைத்த சமஷ்டி தீர்வு யோசனைகள் தோல்வியடைந்ததன் காரணமாகவே அவர்  தமிழீழக் கோரிக்கையை தெரிவு செய்தார் எனவும்  அதற்கு இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளே காரணம் எனவும்  தெரிவித்த அவர்   இடதுசாரி கட்சிகள் கூட தமிழ் மக்களின் உரிமைக்காக பேசினாலும் அவைகூட  இனத்துவேச அரசியலிலேயே ஈடுபட்டன எனவும் தெரிவித்தார்.

மேலும் தமிழ் மக்களுக்காகவும் முஸ்லிம் மக்களுக்காவும் தான் குரல் கொடுத்ததால்தான் தனது  வாக்குகள அதிகரித்தன எனவும்  இதனைச் சிங்களத் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும்  ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply