இலங்கை பிரதான செய்திகள்

இறக்காமத்தில் பௌத்த விகாரை அமைக்கும் விவகாரம் தொடர்பில் ஹக்கீம் – சம்பந்தன் கலந்துரையாடல்


இறக்காமம் மாயக்கல்லி மலையில் பௌத்த விகாரை அமைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சியை தடுப்பது தொடர்பில், அமைச்சர்  ரவூப் ஹக்கீம், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனை நேற்றையதினம்   சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது  மாயக்கல்லி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய உயர்மட்ட நடவடிக்கைளை இருதரப்பும் கூட்டாக மேற்கொள்வது குறித்து  இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுதொடர்பில் ஜனாதிபதி மட்டத்தில் மிக விரைவில் பேசுவதற்கும்  தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.