ஆயுத உற்பத்தியை நிறுத்திக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளும் தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி உலக சமாதானத்தை ஏற்படுத்திவிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மெய்யான சமாதானத்தை நிலைநாட்ட வேண்டுமாயின் மோதல்களுக்காக பயன்படுத்தப்படும் ஆயுத உற்பத்தியை நிறுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
அலரி மாளிகையில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உலக சமாதானத்தை ஏற்படுத்த ஆயுத உற்பத்தி செய்யும் நாடுகளின் தலைவர்கள் தலையீடு செய்ய வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment