விளையாட்டு

சர்வதேச கிரிக்கட் பேரவை புதிய நிர்வாக முறையை அறிமுகம் செய்ய உள்ளது


சர்வதேச கிரிக்கட் பேரவை புதிய நிர்வாக பொறிமுறைமையை அறிமுகம் செய்ய உள்ளது. சர்வதேச கிரிக்கட் பேரவையின் நிர்வாகக் கட்டமைப்பு பெரும்பாலும் இந்தியா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கைகளிலேயே காணப்பட்டது. இந்த விடயத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் நிதி விவகாரங்கள் மற்றும் நிர்வாக விவகாரங்களில் பிரதான மூன்று நாடுகளுக்கு காணப்பட்ட முன்னுரிமை வரையறுக்கப்பட உள்ளது.

புதிய நடைமுறை குறித்த வாக்கெடுப்பில் இந்தியாவைத் தவிர்ந்த ஏனைய நாடுகள் அனைத்தும் புதிய நடைமுறைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தது.  மேலும் இந்த நடவடிக்கையினால்  இந்தியா கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply