பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனிசியா கடற்கரையை ஒட்டிய பகுதி மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் சில கிராமங்களில் சிறிய அளவிலான சுனாமி எச்சரிக்கை காரணமாக மக்கள் வெளியேற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு மற்றும் சேதம் குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
1990-ம் ஆண்டு வடக்கு பிலிப்பைன்சில்; ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 2 ஆயிரம் மக்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment