இந்தியா

கொடநாடு பங்களாவின் காவலாளி கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த ஜெயலலிதாவின் வாகன சாரதி வீதிவிபத்தில் உயிரிழப்பு


முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு  பங்களாவின் காவலாளி ஓம்பகதூர் கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த  ஜெயலலிதாவின் வாகன சாரதியான கனகராஜ்  என்பவர்  இன்று காலை வீதி விபத்தில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த 24ம் திகதி  ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் காவலில் ஈடுபட்டிருந்த ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டதுடன் மற்றொரு  காவலாளிக்கு  காயம் ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று காலை சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடந்த வீதி விபத்தில் கனகராஜ் உயிரிழந்துள்ளார்.  கோடநாடு வழக்கில் இவரை போலீஸார் தேடிவந்த நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளதால் இது விபத்தா இல்லை திட்டமிட்டு நடத்தப்பட்ட விபத்து போன்ற கொலையா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply